ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியுடன் அலைந்து கொண்டிருந்தது. அரை மயக்கத்துடன் தள்ளாடி கொண்டு நடந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்ற போது திடீரென
பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. நரிக்கு
உயிரே போயி விட்டது போல் இருந்தது.
ஏதோ பயங்கர விலங்கு ஒன்று நம்
காட்டுக்குள் வந்து விட்டது என்று எண்ணிய
நரிக்கு அடி வயிறு கலங்கியது. பசி
நேரத்தில் நம்மால் ஓடக் கூட முடியாதே சரி எப்படியும் இந்த விலங்கிடம் இன்று இரையாகப்
போகிறோம் என்று எண்ணிக் கலங்கியது நரி. சற்று நேரம் அப்படியே நின்று
கொண்டிருந்தும் ஏதும் நடக்காமல் போகவே கொஞ்சம் தெம்பு வந்தது. அருகில் இருந்த ஒரு
பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும்
பார்த்தது.
அப்போது தூரத்தில் ஒரு பெரிய பாறை போன்ற ஒரு உருவம் தென்பட்டது.
மீண்டும் ஒரு முறை திடீரென
சப்தம் உண்டானது. நரிக்கு கலக்கம் அதிகமானது.சற்று உற்று பார்த்த போதுதான்
தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல மெல்ல சென்று சுற்றி
சுற்றிப் பார்த்தது. பார்ப்பதற்கு பயன்படுத்தி பல நாட்கள் ஆனது போல்
இருந்தது. உள்ளே ஏதோ சிறிய மிருகம் ஒன்று இருந்து கொண்டுதான் சப்தம்
எழுப்புகிறது என்று எண்ணியது நரி.பசியில் இருந்த நரி பேரானந்தம் கொண்டது.
தன் கூரிய
பற்கள் மற்றும் நகங்களை கொண்டு
அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணிய நரி அவ்வாறே
செய்தது. அப்போது நரிக்கு தாடை மற்றும் கைகளில் பலமான காயங்கள் ஏற்பட்டு
இரத்தம் வந்தது. உள்ளே இருக்கும் மிருகத்தினை பிடிக்க தயாராக இருந்த
நரிக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் அங்கே ஒன்றுமே இல்லை.
பசியோடு இருந்த நரிக்கு இரத்தக்
காயங்கள் மேலும் சோர்வை ஏற்படுத்த
மயக்கமுற்றது.
உண்மையில் அருகில் இருந்த புதர்ச்
செடிகள் முரசின் மீது காற்றில் உரசி உரசியே அந்த சப்தம் உண்டானது.
நீதி- எந்நிலையிலும் எந்த ஒரு காரியத்தையும் ஆராயாமல் செய்வது நன்மையை
தராது!
No comments:
Post a Comment