மகத நாட்டை சேர்ந்தவன் சுத்தன் எனும்
தச்சன்.அவன் அவ்வூர் கோயில் வேலைக்காக மரங்களை அறுத்து கொண்டிருந்தான். மாலை வேளை நெருங்கவும் சுத்தன்
தான் பாதியில் அறுத்து
கொண்டிருந்த மரத்தில் ஆப்பு ஒன்றை
சொருகி வைத்து விட்டு வீட்டிற்கு
சென்றான். அருகில் இருந்த மரத்தில்
ஏராளமான குரங்குகள் விளையாடிக்
கொண்டிருந்தன. அவற்றில் ஒரு குரங்கு
இறங்கி சுத்தன் பாதி அறுத்து
விட்டு சென்ற மரத்தின் மீது
விளையாடியது. சும்மா இல்லாமல் அம்மரத்தின்
மீதே அமர்ந்து கொண்டு அங்கே சொருகி
வைத்திருந்த ஆப்பை அசைத்து ஆட்டிப்
பிடுங்கியது. அச்சமயத்தில் அக்குரங்கின் பீஜமானது
ஆப்பு வைத்திருந்த பிளவில் மாட்டிக்
கொண்டது. இரவு நெருங்கும் நேரம் ஆகவே ஒருவரும் உதவி செய்ய இல்லாமல் மாட்டிகொண்டு
இறந்துபோனது.
நீதி- தனக்கு
தகாத காரியங்களை செய்தல் ஆகாது!
No comments:
Post a Comment